search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன்"

    சாலை விதிகளை மாணவர்கள் மதிக்க வேண்டும் என்று கரூர் ஆசான் கல்லூரி விழாவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பேசினார்.

    கரூர்:

    கரூர் ஆசான் கலை அறிவியல் கல்லூரி, கரூர் மாவட்ட காவல் துறை, வட்டார போக்குவரத்து அலுவலகம் இணைந்து நடத்திய சாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆசான் கல்லூரியில் நடந்தது.

    கல்லூரி செயலாளர்ஆர். ஜெக நாதன் தலைமைதாங்கினார். துணை முதல்வர் சரவண பிரகாஷ் வரவேற்றார். துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்பிரமணின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுபாஸ்கரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசியதாவது:-

    காவல்துறையினர் உங்கள் நண்பர்கள். நானும் உங்களை போன்று மாணவனாக இருந்து தான் வந்திருக்கிறேன். இளம் கன்று பயமறியாது என்பார்கள். ஆனால் நாம் அஜாக்கிரதையாக இருந்து ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் உங்கள் பெற்றோர் மட்டுமல்லாமல் உறவினர்கள், நண்பர்கள் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஒரு நாள் கல்லூரியில் இருந்து வழக்கமாக நேரத்தை தாண்டி அரை மணிநேரம் கழித்து வீட்டுக்கு சென்று பாருங்கள். வழக்கமான நேரத்தை தாண்டி ஒவ்வொரு நிமிடமும் உங்களை பற்றியே பெற்றோருக்கு சிந்தனை ஓடும். பின்னர் உங்களை பார்த்த பின்னரே வேறு வேலையில் கவனம் செலுத்துவார்கள்.

    ஆகவே சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள் நான் இந்த நிலைக்கு உயர்ந் திருப்பதால் தான் நான் படித்த கல்லூரியிலேயே என்னை சிறப்பு விருந்தினராக அழைத்தார்கள். எனவே நீங்களும் வாழ்வில் உன்னத நிலையை அடைய வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அ வர் கூறினார். 

    நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

    ×